பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு, 'ப்ரீ!' தனியார் பஸ் நிர்வாகத்தின், 'சபாஷ்' சேவை
Added : அக் 05, 2018 02:05 |
கோவை : பள்ளி மாணவர்களின் நலன் கருதி, 5 ரூபாய் 'டிக்கெட்' கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ் நிறுவனத்துக்கு, பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிகின்றன.
பயணிகளை வளைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டிபோட்டு இயக்கும் பஸ்கள் மத்தியில், பள்ளி மாணவர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம்.
ஒண்டிப்புதுார் - வடவள்ளி, ஒண்டிப்புதுார் - மணியகாரம்பாளையம், காந்திபார்க் டூ காந்திபார்க் என பல்வேறு வழித்தடங்களில் விஜய் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ்களில் செல்லும் பள்ளி மாணவர்கள், 5 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
அதற்கு, அடையாள அட்டை அல்லது பஸ் பாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பஸ் கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகள், தலைமை ஆசிரியரிடம் பெற்ற கடிதத்தை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.
விஜய் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கிஷோர் கூறுகையில்,''பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்பதே சிரமம் என்பதால், அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மீதமுள்ள மாணவர்களிடம் ரூ.5 மட்டுமே. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும், ஐந்து பஸ்களிலும் பள்ளி மாணவர்களுக்கு இச்சலுகை உண்டு. எதிர்காலத்தில் மேலும் பல சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
விஜய் பஸ்சுக்கு போடுவோம் ஒரு ஜே!

No comments:
Post a Comment