Tuesday, October 23, 2018

ராமாயண யாத்திரை சிறப்பு ரயில் இயக்கம்

Added : அக் 23, 2018 03:07

கோவை,: தென் மாநிலங்களில் முதன் முறையாக ராமாயண யாத்திரை சிறப்பு ரயில் நவ., 14ல் இயக்கப்படுகிறது.ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், ஈரோடு, சென்னை வழியாக, நாசிக், சித்திரக்கூடம், தர்பாங்கா, சீதாமார்ஹி, அயோத்யா, நந்திகிராமம், அலகாபாத், சிருங்கவெற்பூர் செல்கிறது.அங்கிருந்து, நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும், ஜனக்புரிக்கு சென்று, இறுதி யில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் வந்து, மதுரையில் முடிவடைகிறது.யாத்திரைக்கு நபருக்கு, 15 ஆயிரத்து, 830 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 90031 40655, 90031 40681 ஆகிய எண்களிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும், தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024