Monday, October 1, 2018

ஒரு சிலிண்டருக்கு மண்ணெண்ணெய் நிறுத்தம்

Added : செப் 30, 2018 23:38

சென்னை : ஒரு சிலிண்டர் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் முதல் மண்ணெண்ணெய் நிறுத்தப்பட உள்ளது.ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் உள்ளோருக்கு, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு, 2 லி., மண்ணெண்ணெய், சிலிண்டர் இல்லாதோருக்கு, மாநகராட்சியில் 6 லி., நகராட்சியில் 4 லி., கிராமங்களில் 2 லி., மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.மத்திய அரசு அனுமதிப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தமிழகத்திற்குரிய ஒதுக்கீட்டை வழங்குகின்றன. 10 ஆண்டுக்கு முன், 64 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து, தற்போது, 39 சதவீதமாக உள்ளது.இம்மாதம் முதல், ஒரு சிலிண்டர் கார்டுதாரருக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வழங்கல் துறை ரத்து செய்துள்ளது.ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே அறிவித்தப்படி ஒதுக்கீடு இல்லாததால், பெயரளவில்தான் மண்ணெண்ணெய் வழங்குகிறோம். 'தற்போது முன்னறிவிப்பின்றி ஒரு சிலிண்டர் உள்ளோருக்கும் மண்ணெண்ணெயை நிறுத்திவிட்டனர். இதனால் கார்டுதாரர்கள் எங்களிடம் பிரச்னை செய்வர்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024