Monday, October 1, 2018


103 வயது முதியவருக்கு பூர்ணாபிஷேக விழா

Added : அக் 01, 2018 00:00 |



புதுக்கோட்டை அருகே, 103 வயது முதியவருக்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக, பூர்ணாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே, மட்டங்கால் பகுதியைச் சேர்ந்தவர், சண்முக வேளாளர், 103. இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.சண்முக வேளாளரின், 103வது பிறந்த நாளை ஒட்டி பூர்ணாபிஷேக விழா நடந்தது. இதில் அவரது நான்கு மகன்கள், மூன்று மகள்கள் பங்கேற்றனர். மூத்த மகளுக்கு வயது 75, இளைய மகளுக்கு வயது 58. மகன்கள் மற்றும் மகள்கள் வழி பேரன்கள், பேத்திகள், 23 பேர் மற்றும் கொள்ளுப்பேரன், பேத்திகள், 17 பேர் உள்ளனர்.பூர்ணாபிஷேக விழாவில், குடும்பத்தினர்கள், உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரும் சண்முக வேளாளரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024