Monday, October 1, 2018

அரசியலில் குதித்தார் விஜயகாந்தின் மூத்த மகன்

Added : செப் 30, 2018 23:46 | 



தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் மூத்த மகன், விஜய் பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜய் பிரபாகரன், சென்னை பேட்மிட்டன் அணியின் உரிமையாளராக உள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும், நாய்களையும் வளர்த்து வருகிறார். இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.விஜயகாந்திற்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரது மூத்த மகன், விஜய் பிரபாகரன் கட்சியை வழிநடத்த வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் வலியுறுத்தினர். இதை ஏற்று, தன் மகனை, அரசியலில் விஜயகாந்த் ஈடுபடுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்துாரில், வரும், 6ல், தே.மு.தி.க., பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, தன் அரசியல் பயணத்தை, விஜய் பிரபாகரன் துவக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024