Sunday, December 8, 2019

குழந்தைகளின் ஆபாச படம பார்த்த 3,000 பேருக்கு வருகிறது, 'சமமன்'

Added : டிச 08, 2019 01:34


சென்னை: குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்த்த, 3,000 பேரின் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர்.

அவற்றை, மாவட்ட வாரியாக பிரித்த பின், 'சம்மன்' அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.தமிழக காவல்துறையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு,இந்தாண்டு ஜனவரியில் உருவாக்கப்பட்டது.இந்த பிரிவு, தமிழக காவல்துறை, கூடுதல் டி.ஜி.பி., ரவி தலைமையில் செயல்பட்டு வருகிறது. 'குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள், இந்தியாவில் அதிகம் பார்க்கப்படுகின்றன.

'தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், இந்த எண்ணிக்கை அதிகம்' என்ற அதிர்ச்சி தகவல், சமீபத்தில் வெளியான அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தமிழக காவல்துறைக்கு, மத்திய உள்துறை உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் என, 5,000 பேருக்கு மேலானோர் சிக்குகின்றனர்.இந்நிலையில், சிலரின் பயத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள், போலீசார் பேசுவது போல பேசி, மிரட்டும் ஆடியோ பதிவு, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்களில், 3,000 பேர் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த பட்டியல், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து, முறையாக சம்மன் அனுப்பப்படும்.காவல் நிலையத்தில் ஆஜராகும் போது, அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும். அவர்களின் மனநிலை அறிந்து, தொடர் கவுன்சிலிங் பெறவும் அறிவுறுத்தப்படும். தேவைப்பட்டால் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். போலீசார் யாரையும், மொபைல் போன், தொலைபேசி வாயிலாக விசாரிக்கவோ, மிரட்டவோ மாட்டார்கள்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024