Sunday, December 8, 2019

நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் இரு மாணவருக்கு தொடர்பு

Added : டிச 08, 2019 00:12

தேனி: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய, இரு புரோக்கர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும், இரு மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது, தெரிய வந்துள்ளது.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டில் சேர்ந்ததாக, தேனி மருத்துவக் கல்லுாரி மாணவர் உதித்சூர்யா, மாணவி பிரியங்கா உட்பட, ஐந்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐந்து மாணவர்கள் உட்பட, ஒன்பது பேர் ஜாமின் பெற்றனர். மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதி, சிறையில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், புரோக்கர்கள் முருகன், விஸ்வநாதன் ஆகியோரை, பெங்கரூருவில் பிடித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்ளை தேனி அழைத்து வந்து விசாரிக்கின்றனர். முக்கிய புரோக்கர் ரஷீத், தலைமறைவாக உள்ளார். போலீசார் கூறியதாவது:ரஷீத்தின் மனைவி ஹீனாகவுஸ், எல்.ஐ.சி., ஏஜன்ட். அவரது நண்பர் முருகன். அபிராமி என்ற மாணவியை, மருத்துவப்படிப்பில் சேர்க்க, முருகன் மூலம், ரஷீத்தின் உதவியை நாடி, பணம் கைமாறி, ஆள்மாறாட்டம் நடந்துள்ளது.

அபிராமியின் தந்தை மாதவனின் உடல்நிலை கருதி, விசாரணை முடித்து, நிபந்தனைகளுடன் அனுப்பி வைத்தோம். தேவைப்பட்டால், அதில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரியங்காவிற்கு, விஸ்வநாதன் உதவியுடன், முருகன் மூலம், ரஷீத்திடம் பணம் தரப்பட்டுள்ளது. இரு புரோக்கர்கள் அளித்த தகவலில், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில், மேலும் இரு மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கும், 'சம்மன்' அனுப்ப உள்ளோம்.விரைவில் ரஷீத், அவரின் மனைவி, மற்றொரு புரோக்கர் வேதாசலத்தை கைது செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024