பொங்கல் பரிசுக்கு தனி குழு அமைப்பு
Added : டிச 08, 2019 01:27
சென்னை: பொங்கல் பரிசு வினியோகத்தை கண்காணிக்க, தாலுகா தோறும், கூட்டுறவு சார் பதிவாளர் தலைமையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்க உள்ளது. இதை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சமீபத்தில் துவக்கி வைத்தார். இருப்பினும், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசு வினியோகத்தில், முறைகேடுகள் நடக்காமல் இருக்க, தாலுகா தோறும், கூட்டுறவு சார் பதிவாளர் தலைமையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள், பொங்கல் பரிசு வழங்கும் பணி துவங்கியதும், கடைகளில், பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைப்பதையும்; ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியாக வழங்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கும்.
No comments:
Post a Comment