Sunday, December 8, 2019

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்மிக சுற்றுலா

Added : டிச 08, 2019 01:25

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, புதிய சுற்றுலா திட்டத்தை, தமிழக சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

தினமும் காலை, 7:00 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் சுற்றுலா பஸ், நான்காம் நாள் இரவு, 10:00 மணிக்கு, சென்னை வந்தடையும். இதில், செல்லும் போது குற்றாலத்திலும், திரும்பும் போது, கோவையிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு பஸ்சில் பயணிக்க, இருவர் பகிர்ந்து கொள்ளும் படுக்கை, உணவு வசதிகளுடன் கட்டணமாக, 6,500 ரூபாயும், சொகுசு பஸ்சுக்கு, 5,500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி உண்டு. சென்னையில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன், குற்றாலம் குற்றாலநாதர் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

சபரிமலை தரிசனம் முடித்து, திரும்பும் வழியில், குருவாயூர் கிருஷ்ணன், சோட்டாணிக்கரை பகவதி அம்மன், கோவை ஈசா ஆதியோகி, சேலம், வேலுார் கோவில்களுக்கும் செல்லலாம். கூடுதல் விபரங்களுக்கு, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமையகத்தை, நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044 - -2538 4444, 2538 3333, 2538 9857 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024