Monday, March 16, 2015

மத்திய அரசு ஊழியர்கள், பாகிஸ்தான் தவிர்த்து, இதர 'சார்க்' நாடுகளுக்கு, விடுப்பு பயண சலுகையில் (எல்.டி.சி.,) செல்ல அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்துவருகிறது

புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்கள், பாகிஸ்தான் தவிர்த்து, இதர 'சார்க்' நாடுகளுக்கு, விடுப்பு பயண சலுகையில் (எல்.டி.சி.,) செல்ல அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்துவருகிறது

இது குறித்து பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு, வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., மூலம், சார்க் நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.பரஸ்பர வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த, இத்திட்டம் துணை புரியும். அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, எல்.டி.சி.,யின் புதிய விதிமுறைகள்அமலுக்கு வரும்.

மோடி பிரதமரானதும், சொந்த ஊர் செல்வதற்கான எல்.டி.சி.,யில், ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை காணும் வசதியை, 2016ம் ஆண்டு செப்., 25ம் தேதி வரை நீட்டித்தார்.விமான பயணம் தொடர்பாக, எல்.டி.சி.,யை முறைகேடாக பயன்படுத்திய மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள்எம்.பி.,க்கள் ஆகியோர் மீதான புகாரை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, எல்.டி.சி., அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் வழங்கும் விமான டிக்கெட்டை அவ்வப்போது பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024