பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களின் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தேர்வு முடிவுகளைப் போல தற்கொலை முடிவுகள் வரிசையாக வெளிவரத் துவங்கின.
ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நெசவுத் தொழிலாளியின் மகள் மஞ்சுளா, தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் மதிப்பெண் குறைந்து விட்டதே என தீக்குளித்து இறந்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம் நாகராஜ் மகன் குணசேகரன், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் கரிகாலன் மகள் இலக்கியா, மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை. தேனி, கண்டமனூர் அன்னக்கொடி மகன் அஜய்யோ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபிசெட்டிப்பாளையம் மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதி மாணவி கலா தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.
விழுப்புரம், தோகைப்பாடி காலனி முருகன் மகள் தேவதர்ஷினி, கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை. இப்படி விரிந்து வேதனையாக நினைவுகளாகச் செல்கிறது இளம் பள்ளிச் சிறுவர்களின் தற்கொலைகள்.
'தேர்வில் வென்றால் மட்டும் போதாது உயர் கல்விக்கு தகுதி பெறும் உயர்ந்த மதிப்பெண் பெற்றாக வேண்டும்...!' என்ற அழுத்தம் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சென்ற தலைமுறை வரை தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது கூட இந்த அளவு தற்கொலை நிகழ்ந்ததில்லை. பள்ளி வாழ்க்கை, மதிப்பெண்களுக்கு அப்பால் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட தலைமுறை அது. ஆனால், இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது நமது சமூக அமைப்பு.
'வெற்றி பெறுவதல்ல. அதிகம் மதிப்பெண் பெற வேண்டும்., போட்டியில் நீ இருக்க வேண்டும் என்றால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!' என போதிக்கிறது நமது புதிய கல்வி மரபு. உண்மையில் பள்ளிக்கூடங்களின் நோக்கம்தான் என்ன?
மதிப்பெண் பெறுவது. 100% சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டி, மேலும் மேலும் கல்விப் போட்டியில் தங்கள் பள்ளியை முதன்மைப் பள்ளியாக மாற்றுவது என்ற பிராய்லர் பள்ளி தேர்வு முறைகளே இந்தக் தற்கொலைகளுக்கு காரணம். நமது கல்வி முறை கடுமையாக பிளவுபட்டு நிற்கிறது. ஏழைகளுக்கு சேரிப் பள்ளிகளும், செல்வந்தவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளுமாக கல்வித் திட்டங்களே வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப மாணவர் பருவத்தை பிளவுபடுத்தி விட்டது.
நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளிலும், தமிழகம் முழுக்க கடை விரித்திருக்கும் தனியார் பள்ளிகளும் குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை துன்புறுத்துகின்றன. பிளஸ் டூ பாடத்தை 11-ம் வகுப்பிலே தொடங்கி நடத்துகின்றன. டியூஷன் செல்லவோ, பணம் செல்வழித்து படிக்கவோ வசதியற்ற மாணவர்கள் ஓராண்டு மட்டுமே படிக்கும் பாடத்தை, வசதியுள்ள மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். டியூஷன் செல்கிறார்கள். இது போக உள்ளூர் ஆசிரியர்களின் உதவியோடு நடக்கும் தேர்வுகளில் கேள்வித்தாள்களும் லீக் ஆகி, மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு கல்விமுறையை நடத்தி முதல்மதிப்பெண் கொண்டாட்டங்களை பெருமையாக கொண்டாட பள்ளிகள் தேவையில்லை. டியூட்டோரியல்களே போதுமானவை.
இதற்கிடையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட்டு, 8-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு. இன்னொரு பக்கம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.) வழங்கியுள்ள உரிமையை இது இல்லாதொழிக்கிறது.
பள்ளிக்கூடங்களின் நோக்கம்
ஒரு குழந்தை பிறப்பதன் அடிப்படை, அது குழந்தை பிராயத்தில் இருந்து வளரும் போது சமூக விலங்காக மாற வேண்டும். ஆமாம், சமூக மயமாதல் என்பது வெறுமனே பெற்றோரிடம் மட்டும் நடப்பதல்ல. பள்ளிக்கூடம் அதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்றைய கல்வி முறை நமது இளம் தலைமுறையை சமூக மயமாக்குவதற்கு பதிலாக, சமூகத்தில் இருந்து மிக மோசமாக விலக்கி வைக்கிறது. பாரபட்சமாக அடித்துத் துரத்துகிறது. அதன் விளைவுகள்தான் இந்த தற்கொலைகள். ஒரு வகையில் இது தனியார் கல்விமுறை நடத்தும் கொலைகளே.
இந்த கல்வியாண்டில் 100 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்தை அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இலக்காக நிர்ணயித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஆனால் தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது அரசுப் பள்ளிகள். இது அரசும், பல விதமான பாரபட்சமான கல்விமுறையும் நமது ஏழைக் குழந்தைகள் மீது நடத்தும் பகிரங்கமான போர் அல்லவா?
-டி.அருள் எழிலன்

No comments:
Post a Comment