Sunday, April 24, 2016

 அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. நேற்று வரை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், ஒரு லட்சத்து, 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 54 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், கல்லுாரிகளின் விவரங்களை மாணவர் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இதில், கல்லுாரிகள் பற்றி முழு விவரம், என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன; அவை எப்போது துவங்கப்ப ட்டன; விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல விவரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


- நமது நிருபர் -
[07:09, 4/24/2016] +91 98406 53153: 'ஏசி' பஸ்சில் ஏறியவர்கள் தவிப்பு 4 மணிநேர வியர்வை குளியல்

வெயில் தாங்காமல், 'ஏசி' பேருந்தில் பயணித்தவர்கள், 4 மணிநேர வியர்வை குளியலுக்கு

ஆளானதால், புழுக்கத்தில் தவித்தனர்.

நேற்று பிற்பகல், 3:30 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 'ஏசி' பேருந்து (டி.என். 01 என். 7462) இயக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அந்த பேருந்தில் பயணிகள் அதிகளவில் ஏறினர். ஆனால் பேருந்தில், 'ஏசி' வசதி கிடைக்காததால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சாதாரண பேருந்துகளில் ஜன்னல் திறந்திருக்கும்; அவற்றின் வழியாக காற்று வந்து செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், 'ஏசி' பேருந்துகளில் எல்லா பகுதிகளும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருக்கும். அதனால், பயணிகள் பெரும் புழுக்கத்தில், 4 மணிநேரம் தவித்தனர்.

இதுகுறித்து, பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியதாவது:

பேருந்து பயணக் கட்டணம், 190 ரூபாய் என்ற போதிலும், 'ஏசி' வசதிக்காக ஏறினோம். பேருந்தில் ஏறியவுடன் போதிய, 'ஏசி' வசதியில்லாதது குறித்து, நடத்துனரிடம் கேட்டோம்.

'போகப் போக சரியாகிவிடும்' என, நடத்துனர் கூறினார். ஆனால், 'ஏசி' இல்லாமல், வெப்பம் உள்ளுக்குள் தகித்தது. 4 மணிநேரமும் வியர்வையில் பயணிகள் அனைவரும் புழுங்கி தவித்தோம். இனியாவது, 'ஏசி' பேருந்துகளின் பராமரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...