Thursday, April 14, 2016

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

தினமணி

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் அங்குள்ள செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களால் குறைந்த விலைக்கு கருவிகளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதையடுத்து இந்தியாவில் 4-ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களிடம் 4-ஜி  ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன.

இந்த வாரத்தில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிகாம் சலுகைகள் உள்பட ரூ.3,999க்கு 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8 ஆயிரத்துக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...