Thursday, April 28, 2016

சொன்னால் போதாது

லகம் முழுவதும் ஒரு பெரிய அழிவு சக்தியாக, அணுகுண்டுக்கும் மேலான ஆபத்தாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்கள்தான். இதை உச்சநீதிமன்றமே தெளிவாக கூறியிருக்கிறது. 2012-ம் ஆண்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்ச், பிளாஸ்டிக் தீமைகள் பற்றி தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அபரிமிதமான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடும், அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தாத தன்மையும், நமது ஏரிகள், குளங்கள், கழிவுநீர் கால்வாய்களை அடைத்துக்கொள்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஒரு அணுகுண்டைவிட அதிக பாதிப்பை விளைவிப்பது பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக்கை முழுமையாக தடைசெய்வதை நாம் பரிசீலிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். நாட்டில் மட்டுமல்லாமல், கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆதிக்கம் இப்போது அதிகமாகி, கடலில் சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைத்துவிட்டது. அதனால்தான் Òஆழ்கடலில் உள்ள பிசாசுகள்Ó என்று பிளாஸ்டிக் பொருட்களை கூறுகிறார்கள். 

இந்தியாவில், எல்லோருக்கும் வழிகாட்டும் வகையில், கர்நாடக அரசாங்கம் கடந்த மாதம் பிறப்பித்த ஒரு ஆணையின்படி, எவ்வளவு தடிமன் என்று கணக்கில்லாமல், பிளாஸ்டிக் பைகள், பேனர்கள், கொடிகள், அலங்கார தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள், தட்டுகள், கப்புகள், விரிப்புகள் என்று எல்லாவற்றையும் தடைசெய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் பிரிவு 5-ன்படி இந்த சட்டத்தை பிறப்பிப்பதாகவும், இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பை தொட்டியில் போடுபவர்களுக்கும் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது. 

கர்நாடக அரசு தடை செய்துவிட்டது. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? என்பதுதான் இப்போது எல்லோரது பார்வையாக உள்ளது. அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் என்று எல்லா ஊர்களும் திருவிழா கோலம் காணுமே, இதுவும் கூடுதல் அழிவை ஏற்படுத்தும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்சில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்தலின்போது 40 மைக்ரானுக்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மீதும், அவற்றை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. 

2011-ம் ஆண்டே பிறப்பிக்கப்பட்ட சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் தயாரிக்கும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்களில், அந்த நிறுவனத்தின் பதிவு எண் அச்சிடப்படவேண்டும் என்று, யார் தயாரித்தார்கள்? என்று அடையாளம் காட்டுவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் முடிந்தவுடன் இந்த கொடிகள், பேனர்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து, அவற்றை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சியோ, அழிக்கவோ உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவுறுத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷனும் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு, பிறமாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையவுள்ளது. 

அதே நேரம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏராளமான அதிகாரம் உள்ளது. உயர்நீதிமன்றத்திலேயே ஒப்புதல் அளித்துள்ள இந்த நடவடிக்கைகளை சொன்னால் போதாது, செயலில் காட்டவேண்டும். இந்த தேர்தலில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான எந்த பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இந்த பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டம் என்ற ஆயுதம் அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கையில் இருக்கிறது. அதை பயன்படுத்துவது அவர்கள் 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024