உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத் தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை எந்த முறையில் அமைந்திருக்கும்? என்ற சந்தேகம் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்குமா அல்லது பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளுமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலாவிடம் கேட்டபோது, “மருத் துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து (எம்சிஐ) எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. தமிழக அரசு என்ன சொல்கிறதோ, அதை மருத்துவ கல்வி இயக்ககம் பின்பற்றும்” என்றார்.
No comments:
Post a Comment