Friday, April 8, 2016

சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு

பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால், தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், முன்னணி பெற வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு, சில கேள்விகளுக்கு, 'போனஸ்' மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இந்த முறை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, கணிதம், வேதியியல் மற்றும் உயிரி விலங்கியல் தேர்வுகள், மிக கடினமாக இருந்தன. வேதியியல் கடினமாக இருந்தாலும், தேர்ச்சி குறையாது என, தெரிகிறது.

இந்த மூன்று பாடங்களிலும், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கான வினாத்தாள், இந்த அளவுக்கு கடினமாக இல்லை.

அதனால், இந்தாண்டு தொழிற்கல்வியில், இன்ஜி., சார்ந்த படிப்புகளான, பொது இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், ஆட்டோ மெக்கானிக், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், சிவில் வரைவாளர், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் போன்றவற்றை படிக்கும், பிளஸ் 2 மாணவர்கள், கணித மாணவர்களை விட, அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ளது.

இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், கணித பிரிவு மாணவர்களுடன், அவர்களுக்கு சமமாக தொழிற்கல்வி மாணவர்களும், அதிக மதிப்பெண்ணுடன் போட்டி போடும் நிலை உள்ளது. எனவே, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, கடந்த ஆண்டை விட, இந்த முறை, தங்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகளை எடுப்பதில், மாணவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

சிக்கலாகும் மருத்துவ 'சீட்':கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களை விட, அறிவியல் மட்டுமே படித்துள்ள, பிளஸ் 2 மாணவர்கள், இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு, வேதியியல் தேர்வு மட்டுமே கடினமாக இருந்தது. இயற்பியல், விலங்கியல் மற்றும் உயிரியல் பாடங்கள், எளிமையாகவே இருந்தன.

எனவே, இந்த முறை கணித பிரிவு மாணவர்களை விட, அறிவியல் மட்டும் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது. மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண்ணிலும், அறிவியல் மாணவர்கள் முன்னணி பெற்று, மருத்துவ, 'சீட்' பெறுவர் என, தெரிய வந்துள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பிலும், இந்த போட்டி இருக்கும். மேலும், வேளாண்மை பட்டப்படிப்பில், அறிவியல் மாணவர்களுக்கு ஈடாக, வேளாண் செயல்முறைகள் பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...