முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவங்கியது
பதிவு செய்த நாள் 09 மே201700:05
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கிய நிலையில், டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,489 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 762 இடங்கள் உள்ளன.
இவற்றில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராடி வந்த நிலையில், அதை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம், எம்.சி.ஐ., விதிமுறைப்படி, கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, ௭௬௨ இடங்களுக்கான மாண வர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது. முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இவற்றில், 19 இடங்கள் இருந்தாலும், 11 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், 10 பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்தனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது; 11 வரை நடக்கிறது. கவுன்சிலிங் துவங்கிய போது, அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிலர், கவுன்சிலிங் அறைக்குள் புகுந்து, 'எங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் கவுன்சிலிங் நடத்தக் கூடாது' என, அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதையடுத்து, 80 பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால், கவுன்சிலிங், ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.

No comments:
Post a Comment