Friday, May 5, 2017

அழகர் ஆற்றில் எழுந்தருளும் விழா: மே 10-ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு  உள்ளூர் விடுமுறை

By மதுரை  |   Published on : 05th May 2017 07:48 AM  | 

அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வரும் புதன்கிழமை (மே 10) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள், வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இந்த விடுமுறை தினத்திற்குப் பதிலாக ஜூன் 10 ஆம் தேதி வேலை நாளாகப் பின்பற்றப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024