Monday, May 15, 2017

சென்னையில் இன்று சிறப்பு ரயில்கள்

பதிவு செய்த நாள் 14 மே 2017 22:56

சென்னை: பயணிகளுக்கு உதவ, சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, காலை, 8:10 மணி; செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு, காலை, 9:25 மணி, மதியம், 1:15 மணி; மாலை, 5:15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, காலை, 11:15 மணி, மாலை, 3:08 மணிக்கும்; தாம்பரத்திற்கு இரவு, 7:30 மணிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை - வேளச்சேரி இடையே வழக்கமான ரயில்களுடன், 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல், மூர் மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையம் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்தும், ஆவடி, திருவள்ளூர் எண்ணுார், பொன்னேரிக்கும், 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில், 52 ஆயிரத்து, 650 பேர் கூடுதலாக பயணம் செய்யலாம்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...