திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் மொபைல் போன் பயன்படுத்த முடியாது?
சென்னை : சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் ரயில் சேவை
நாளை(மே14) துவங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்யும் போது மொபைல்
போன் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
திருமங்கலம் - நேரு பூங்கா
இடையேயான ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக அனைத்து வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன. சுரங்க மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்
அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, செய்முறை மூலம் விளக்கியும் காட்டினர்.
இருப்பினும் மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில்
பயணத்தின்போது மொபைல் போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என
கூறப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,
தற்போது உள்ள மொபைல் போனின் அத்தியாவசிய தேவையை அறிந்து விரைவில் சுரங்க
ரயில் நிலையங்களில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
Dailyhunt
No comments:
Post a Comment