சுற்றுலா, ஆம்னி பஸ்களை 'பர்மிட்' இன்றி இயக்க உத்தரவு
பதிவு செய்த நாள் 15 மே2017 22:05
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில், நேற்று தமிழகம் முழுவதும், 'பர்மிட்' இல்லாத சுற்றுலா பஸ்களின் இயக்கத்துக்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கால், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தனியாருக்கு சொந்தமான ஸ்பேர் பஸ்கள், ஆம்னி பஸ்கள், சுற்றுலா பஸ்களை இயக்கிக் கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள், போக்குவரத்து துறை மூலம் அனுமதி அளித்தது.
சேலம் மாவட்டத்தில், 120 பஸ்கள், நாமக்கல், 80, ஈரோடு, 90, தர்மபுரி, 60, கிருஷ்ணகிரி, 90 என, தனியார், ஆம்னி, சுற்றுலா பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பஸ்கள், கூட்டம் அதிகமாக காணப்படும் வழித்தடங்களை தேர்வு செய்து, அவற்றில் மட்டுமே இயக்கப்பட்டன. குறிப்பாக, சேலத்தில் இருந்து திருச்சி, நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. ஆனால், நீண்ட வழித்தடங்களான, சேலம் - மதுரை, சேலம் - பெங்களூரு வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: முதல்வரின் சேலம் மாவட்டம், போக்குவரத்து துறை அமைச்சரின், கரூர் மாவட்டங்களில், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுலா, தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எழுத்துப்பூர்வமான, 'பர்மிட்' வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, வாய்மொழி அனுமதியில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment