பெற்றோரின் அனுமதியில்லாமல் மதம் மாறி இளம்பெண் திருமணம் செய்தது செல்லாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2017-05-26@ 00:58:08
திருவனந்தபுரம் : கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா (23). சேலத்தில் உள்ள ஒரு ஹோமியா கல்லூரியில் பிஎச்எம்எஸ் படித்தார். பின்னர் எம்டி படித்துக் கொண்டிருந்தபோது கடந்த ஆண்டு திடீர் என்று அவர் மாயமானார். இது குறித்து பெரிந்தல்மண்ணா போலீசில் அசோகன் புகார் அளித்தார். ஆனால் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆள்கொணர்வு மனு அளித்தார். அதில், எனது மகள் அகிலா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் படிக்கும்ேபாது அவருடன் படித்த சிலர் கட்டாயப்படுத்தி வேறு மதத்திற்கு மாற்றியதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அகிலாவை கண்டு பிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டது. ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் அகிலா, சைனபா என்ற பெண்ணுடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, தனது சொந்த விருப்பப்படி மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள சத்தியதரணி என்ற கல்வி அறக்கட்டளையில் சேர்ந்து மதம் மாறியுள்ளதாகவும், பெற்றோருடன் செல்ல தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார். இதை ஏற்ற நீதிமன்றம் அகிலாவை சைனபாவுடன் அனுப்பி வைத்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் அசோகன் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்காக சிரியாவிற்கு கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதை ெதாடர்ந்து கடந்த டிசம்பர் 19ம் தேதி அகிலா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ஷகீன் ஜகான் என்பவரை தான் திருமணம் செய்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார். இது தொடர்பாக கோட்டைக்கல் தன்வீருல் இஸ்லாம் அமைப்பு செயலாளர் கையெழுத்திட்ட திருமண சான்றிதழையும், திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஆனால் இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் அகிலாவிற்கு கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பஞ்சாயத்து செயலாளருக்கு உத்தரவிட்டது. ேமலும் அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் ேநற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அகிலாவின் திருமணத்தை நீதிமன்றம் ரத்து ெசய்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘‘பெற்றோர் சம்மதத்துடன்தான் ஒரு பெண்ணின் திருமணம் நடைபெறவேண்டும். ஆனால் அகிலா ெபற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்துள்ளார்.
இது சட்டப்படி செல்லாது. சைனபாவும் கணவரும் சேர்ந்துதான் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அகிலாவிற்கு திருமணம் ெசய்து வைத்துள்ளனர்.
அகிலாவின் திருமணத்தை நடத்தி வைக்க சைனபாவுக்கும் அவரது கணவருக்கும் எந்த உரிமையும் இல்லை. எனவே அகிலாவை அவரது பெற்றோருடன் செல்ல உத்தரவிடுகிறேன். அகிலாவுக்கும் பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். மேலும் மஞ்சேரியில் உள்ள சத்திய தரணி அமைப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தர
விட்டுள்ளார்.

No comments:
Post a Comment