அதிவேக தேஜாஸ் ரயிலில் இருந்து ஹெட்போன்களை திருடி சென்ற பயணிகள்
2017-05-26@ 00:32:23
மும்பை: தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த ஹெட்போன்களை பல பயணிகள் திருடி சென்றுள்ளனர். மேலும், தகவல் தெரிவிக்கும் ஸ்கீரின்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மும்பை-கோவா இடையே அதிவேக ரயில் சேவை நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்தது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று அந்த மார்க்கத்தில் அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் சேவையை மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. கோவா சென்றடைந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பின்பு அங்கிருந்து கிளம்பி கடந்த செவ்வாக்கிழமையன்று மும்பை வந்தடைந்தது.
மும்பை ரயில் நிலையத்தில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை பார்வையிட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ரயிலில், தகவல் தெரிவிக்கும் ஸ்கீரின்களுடன் இணைக்கப்பட்டு இருந்த அதிக தரம் வாய்ந்த ஹெட்போன்களில் குறைந்தபட்சம் 12ஐ பயணிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும், சில ஸ்கீரின்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. பெட்டி முழுவதும் குப்பைகளை போட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, தற்போது ரயிலை சேதப்படுத்த வேண்டாம் என்று பயணிகளிடம் வலியுறுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிகபட்சம் மணிக்கு 200கி.மீ. வேகத்தில் செலுத்தலாம். இந்த ரயிலில், தானியங்கி கதவுகள், ஒவ்வொரு இருக்கையிலும் தகவல் தெரிவிக்கும் ஸ்கீரின்கள், டீ, காபி வழங்கும் இயந்திரங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.
அதிகாலை 5 மணிக்கு மும்பையிலிருந்து கிளம்பும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.30 மணி அளவில் கோவா சென்றடையும். கோவாலிருந்து மதியம் 2.30 மணிக்கு கிளம்பும் ரயில் அன்று இரவு 11 மணிக்கு மும்பை வந்தடையும். மழைக்காலம் இல்லாத காலத்தில், மும்பை-கோவா இடையே தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் (செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்படும். அதேசமயம் மழை காலத்தில் (ஜூன் 10 முதல் அக்டோபர் 31 வரை) வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே (திங்கள், புதன், சனி) இயக்கப்படும்.

No comments:
Post a Comment