Tuesday, May 9, 2017

நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை
நீதிபதி கர்ணன் மீண்டும் அதிரடி


கோல்கட்டா: ''எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் மற்றும், ஏழு நீதிபதிகளுக்கு, தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது,'' என, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ணன், நேற்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.



தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான, கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட் சுயமாக கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

மனநல மருத்துவப் பரிசோதனை

நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, தடை விதித்திருந்தது.
இதனிடையில், நீதிபதி கர்ணனுக்கு,

மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதற்கான அறிக்கையை, 8ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 9ல் வழக்கு விசாரணை நடக்கும் என்றும், சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியிருந்தது.

ஆனால், மனநல மருத்துவப் பரிசோதனைக்குஅவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில், நேற்று நீதிபதி கர்ணன் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வில் உள்ள நீதிபதிகளும், என்னை பணி செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்த நீதிபதி பானுமதியும், எஸ்.சி.. - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளனர்.

தலித்தான எனக்கு எதிராகச் செயல்பட்டதுடன், பொதுப்படையாக அவமானப்படுத்தியுள்ளனர். இந்த குற்றங்களுக்காக, இந்த எட்டு பேருக்கும், தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளின் கீழ்,ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்குள், டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தேசிய கமிஷனில் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தன் தீர்ப்பில், நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

16 கோடி இழப்பீடு

நீதிபதி கர்ணன், தன் தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: என்னை அவமதித்தது தொடர்பாக, தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதித்து, ஏப்., 13ல், நான் அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றவில்லை. இதைத் தவிர, நீதிபதி பானுமதியும், இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக அளிக்க வேண்டும்.

இந்த, 16 கோடி ரூபாயை, அவர்களின் சம்பளத்தில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் பிடித்தம் செய்து, என் கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Those going abroad to get degrees early VNSGU Board Grants Approval

Those going abroad to get degrees early VNSGU Board Grants Approval TIMES NEWS NETWORK 09.01.2025 Surat : In an important move, Veer Narmad ...