Wednesday, May 3, 2017

அரசியல்வாதிகளே 'நீட்' தேர்வை எதிர்க்கிறார்கள்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்



அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன்.
மாணவர்கள் யாரும் 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

''மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு 'நீட்' கண்டிப்பாக வேண்டும். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட மாட்டார்கள்.

சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின் வழியாகத்தான் 'நீட்' தேர்வுகளின் கேள்விகள் இருக்கும். மாநிலப் பாடத்திட்டங்கள் பயன்படாது என்னும் கருத்துகளிலும் உண்மையில்லை.

இரண்டு பாடதிட்டத்துக்கும் பெரிய அளவு வேறுபாடில்லை. நம்முடைய கற்பித்தல் முறையில்தான் குறைபாடே தவிர, பாடத் திட்டத்தில் இல்லை.

'நீட்' தேர்வை நாடு முழுக்க அமல்படுத்துவதன் மூலம் மருத்துவ படிப்புக்கு அளிக்கப்படும் நன்கொடை பெருமளவு குறையும். இதனாலேயே நிறையப் பேர் எதிர்க்கின்றனர்.

குறிப்பாக மாணவர்களோ, கல்வியாளர்களோ 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள்''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024