மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை
பால சரவணக் குமார்
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில், நீதிபதிகள் இருவரின் முரண்பட்ட கருத்தால், மூன்றாவது நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, ''மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று தீர்ப்பளித்திருந்தார்.
இந்த தீர்ப்புக்கான மேல்முறையீடு வழக்கு இன்று(புதன்கிழமை) நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதில் இருவரும் மாறுபட்ட கருத்துகளை முன்மொழிந்தனர்.
நீதிபதிகளின் முரண்பட்ட கருத்து
குறிப்பாக நீதிபதி சசிதரன் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று தீர்ப்பளித்தார். நீதிபதி சுப்பிரமணியம் ''இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். பல ஆண்டுகள் நடைமுறையில் இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை'' என்று கூறினார்.
நீதிபதிகளின் முரண்பட்ட கருத்தால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி அமர்வு விசாரிக்கும். அந்த நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment