Wednesday, May 3, 2017

பத்து ரூபாய் நாணயமா? விரட்டியடிக்கும் வங்கி.

34 லட்சத்துடன் தவிக்கும் பால் நிறுவனம்


ten rupees coin
 
34 லட்ச ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை வாங்க ஆக்ஸிஸ் வங்கி மறுப்பதாக, விஜய் பால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சோமசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் விஜய் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சோமசுந்தரம், நிதி பொது மேலாளர் பன்னீர்செல்வன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, பால் உற்பத்தியாளர்களிடம் 34 லட்ச ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை பெற்றுக்கொண்டோம்.

இந்த நாணயங்களை மாற்றுவதற்காக திருச்சி மண்ணச்சநல்லூர் ஆக்ஸிஸ் வங்கிக்குச் சென்றோம். அப்போது, நாணயங்களை வைக்க வங்கியில் இடமில்லை எனத் திருப்பி அனுப்பிவிட்டனர். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எனப் பலரிடம் முறையிட்டோம். அப்படியிருந்தும் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால், விவசாயிகளும் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்' எனக் குற்றம்சாட்டினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024