Thursday, May 4, 2017

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தனது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறையில் காணொலி காட்சி மூலம் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இன்று மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஜாகீன் உசேன் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பெங்களூரு சிறை நிர்வாகம் ஒப்புதல் தந்தால்தான் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடியும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024