Thursday, May 4, 2017

நிர்பயா வழக்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு

புதுதில்லி: நிர்பயா வழக்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளி சிறுவன் என்று நிரூபிக்கப்பட்டதால் அந்த இளம் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024