Thursday, May 4, 2017

மின் கட்டணத்தையும் ஆதாருடன் இணைக்கும் உ.பி அரசு...

Yogi Adityanath

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து, குடிமக்கள் அனைத்து வித மானியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் ஆதார் உபயோகத்தைக் கட்டாயப்படுத்தி வருகிறது. அனைத்துக்கும் ஆதார் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இருந்தும், மத்திய அரசு விடாப்பிடியாக ஆதார் உபயோகத்தை பரவலாக்கும் முனைப்போடு இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி அரியணையில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், மின் கட்டணத்தை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு, மாநிலத்தில் நிகழும் மின் திருட்டைத் தடுக்க குறைந்தபட்சம் 75 காவல்நிலையங்களையாவது அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மின் திருட்டில் யாராவது பிடிபட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024