Thursday, May 4, 2017

'கத்தரி வெயில்' என்பதன் உண்மை அர்த்தம் என்ன?


"கத்தரி வெயில் தொடங்கியது", "அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது" போன்ற செய்தித் தலைப்புகளை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் தொடக்கத்தில் படித்திருப்போம். ஆனால், இந்த வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. இவை அறிவியல்பூர்வமான வார்த்தைகள் கிடையாது என்பது தான் காரணம்.

‘காற்றழுத்த தாழ்வுப் பகுதி’, ‘வெப்ப சலனம்’, ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’, ‘வளி மண்டல மேல் அடுக்கு’ போன்ற வானிலை சார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற்றவர் ஓய்வு பெற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன். அவர் இதுகுறித்து, 'அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது 100 சதவிகிதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. வானிலை துறையானது ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை' என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024