தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள்...ஸ்டிரைக்?
தமிழகத்தில், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள், காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக, அமைச்சர்,
அதிகாரிகளுடன் நடந்த, பல சுற்றுப் பேச்சு தோல்வி யில் முடிந்ததால், மாநிலம்
முழுவ தும், அரசு பஸ்கள் இயக்கம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழக
அரசின் போக்குவரத்து கழகத்தில், 1.43 லட்சம் ஊழியர்கள்உள்ளனர்.
அவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2016 ஆக., மாதம் முடிந்தது.
ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட அரசியல் குழப்பங்களால், 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த
பேச்சு தாமதமானது. நீண்ட இழுபறிக்கு பின், மார்ச், 7ல், போக்குவரத்துத்
துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க
நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி னர்.
இதுவரை, அமைச்சர் தலைமையில், மூன்று கட்டமாகவும், அதிகாரிகள் தலைமை யில்,
ஒரு கட்ட பேச்சும் நடத்தப்பட்டன. ஆனால், எந்த முன்னேற்ற மும் இல்லாமல்,
தோல்வி யில் முடிந்தன.ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின்
நிலுவை தொகைக்காக, 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, அமைச்சர்
அறிவித்திருந்தார். அதை ஏற்க, தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், இறுதி கட்டமாக, சென்னை, தேனாம்பேட்டை யில் உள்ள தொழிலாளர் நல
வாரிய அலுவல கத்தில், தொழிலாளர் நல, தனி துணை கமிஷனர், போக்குவரத்து
அதிகாரிகள், தொழிற் சங்க நிர்வாகிகள் இடையே, முத்தரப்பு பேச்சு, இரு
நாட்களாக நடந்தன; அதிலும், உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து, நாளை முதல், காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள னர். இதனால், அரசு பேருந்துபோக்குவரத்து சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க செயலர், சின்னசாமி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். பின் அவர், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், இன்று ஐந்தாவது கட்ட பேச்சு நடத்த உள்ளார்; அதில், அதிக நிதி ஒதுக்க உள்ளார்,'' என, தெரிவித்தார்.
இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையில் உள்ள நிதி பற்றாக் குறையை சமாளிக்க வும், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகை வழங்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அரசு, 750 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்குவதாக கூறுகி றது. இதனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது; ஊதிய ஒப்பந்தம் பேசவும் முடியாது. எனவே, திட்டமிட்டபடி, நாளை முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.
இந்த சூழ லில், அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். நாளை பஸ் ஓடாது! அரசு போக்குவரத்து கழகஊழியர்சம்மேளனம் - சி.ஐ.டி.யு., துணைத் தலைவர்,அன்பழகன் கூறியதாவது:ஓய்வு பெற்ற, 64 ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய, 1,700 கோடி ரூபாயை ஒதுக்க வலியுறுத்தினோம். தற்போது, பணியில் உள்ளவர்களுக்கு, பஞ்சப் படி உயர்வு நிலுவைத் தொகை வழங்க, 300 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றோம்.
ஆனால், அரசின் சார்பில், 750 கோடி ரூபாய்க்கு மேல் தர இயலாது என்றனர். அதனால், 'ஸ்டிரைக்' தவிர, வேறு வழியில்லை. இதில், ஆளுங்கட்சி ஆதரவு, அண்ணா தொழிற் சங்கத்தில், நிர்வாக பொறுப்பில் உள்ளவர் களை தவிர, அனைத்து தொழிலாளர்களும் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. எனவே, நாளை முதல் பேருந்துகள் ஓடாது.இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.என்.டி.யு.சி., எதிர்ப்பு 'போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத் தத்தை தவிர்க்க வேண்டும்' என, காங்கிரஸ் ஆதரவு ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக ஐ.என்.டி. யு.சி., தலைவர், கோவிந்தராஜன், பொதுச் செயலர், வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து துறை அமைச்சருடன் நடந்த பேச்சில், முதல் கட்டமாக, 750 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம் ஏற்கனவே, மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வேலை நிறுத்தம் செய்வ தால், கடும் நிதி நெருக்கடி மற்றும் பொருளா தார வீழ்ச்சி ஏற்படும்.
எனவே, தற்போதைய வேலை நிறுத்தம் தேவையற்றது என, ஐ.என்.டி.யு.சி., கருதுகிறது. நஷ்டத்தை தவிர்க்க, வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Dailyhunt
No comments:
Post a Comment