ரூ.2,000 கோடி முறைகேடு: சிக்கும் சோனியா மகள்
புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' தொடர்பான, 2,000 கோடி ரூபாய் முறைகேடு
வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுலை தொடர்ந்து,
பிரியங்காவும், வருமான வரித்துறையின் வளையத்திற்குள் சிக்குகிறார்.மறைந்த
பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' உள் ளிட்ட
பத்திரிகைகளை நடத்தி வந்த, ஏ.ஜே. எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல்
லிமிடெட் நிறுவனம், நிதி நெருக்கடிக்கு ஆளானது.
இதையடுத்து,
அந்நிறுவனத்திற்கு,2008ல் காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாயை, வட்டி இல்லா
கடனாக அளித்தது. அபகரிப்பு புகார் மேலும்,சோனியா, ராகுல் இயக்குனர்களாக
உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம், 2010ல், ஏ.ஜே.எல்., நிறுவ னத்தை விலைக்கு
வாங்கியது.இதை தொடர்ந்து, ஏ.ஜே.எல்., நிறுவனத்தின், 2,000 கோடி ரூபாய்
மதிப்புள்ள சொத்துக்களை, சோனியாவும், ராகுலும் அபகரிக்க முயன்றதாக கூறி,
பா.ஜ., மூத்த தலைவ ரான சுப்பிர மணியன் சாமி, டில்லி கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.
'நோட்டீஸ்' யங் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில்
முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு வருமான
வரித்துறை ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில்,
சோனியாவின் மகள் பிரியங்காவும் சிக்குகி றார். இந்த விவகாரத்தில்,
முறைகேடு நடக்க உடந்தையாக இருந்ததாக கூறி, வரு மான வரித்துறை அனுப்பியுள்ள
நோட்டீசில், பிரியங்கா பெயரும் இடம் பெற்றுள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில்,
சோனியா, ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும் சிக்கியுள் ளது அரசியல்
வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment