'ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்
பாரிஸ்: பிரான்சில், வயது குறைந்த இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன், 39,
தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, 63 வயது என்பதால், அந்நாட்டு
மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில்,
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் இம்மானுவேல்
மக்ரோன், அபார வெற்றி பெற்றார்.
வாழ்த்து இளம் வயதில் அதிபராக
தேர்வாகியுள்ள அவருக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு
மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்ரோன், விரைவில் அதிபராக
பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்ரோனின்
மனைவி டிராகனஸ், 63. இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் கணவன் மக்ரோனை விட, 24 வயது மூத்தவரான டிராகனஸுக்கு, முதல்
கணவர் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு திருமணம் நடந்து அவர்களுக்கும்
குழந்தைகள் உள்ளனர்.பிரான்சில், இளம் வயது அதிபர் தேர்வாகியுள்ள நிலையில்,
அவரது மனைவிக்கு, அவரை விட, 24 வயது அதிகம் என்ற தகவல், தற்போது பிரான்சில்
பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
பிரான்சில் இதுவரை பதவி வகித்த அதிபர்கள்
யாருக்கும் இதுபோன்ற நிலை இல்லை.ஒரு சில அதிபர்கள், தங்களை விட, சில வயது
அதிகம் உடையவர்களை திருமணம் செய்துள்ளனர். ஆனால், மக்ரோனை போன்று, 24 வயது
மூத்த பெண்ணை திருமணம் செய்த அதிபர்கள் இல்லை.இதுபற்றி, பிரான்ஸ் மட்டு
மின்றி பல நாடுகளிலும், ஊடங்களில் செய்திகள் வந்தபடி உள்ளன. பிரான்ஸ்
மக்களும், தங்கள் அதிபரை விட, அவரது மனைவிக்கு, அதிக வயது இருப்பது
குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Dailyhunt
No comments:
Post a Comment