Wednesday, July 5, 2017

1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:28

சென்னை: ''தமிழகத்தில், 1,224 டாக்டர்கள், 1,010 செவிலியர்கள் உட்பட, 4,717 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 1,224 டாக்டர்கள், 600 சிறப்பு உதவி டாக்டர்கள், 1,010 செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைகளில், 137 உதவி மருத்துவ அலுவலர்கள்.

மேலும், 33௩ மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வக உதவியாளர்கள், ௧௭௯ இதய வரைபட டெக்னிசியன்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழி ஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 26 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகம் அமைக்கப்படும். காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், 141.14 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். மேலும், '108' ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஐந்து கோடி ரூபாயில், 50 வாகனங்கள் வாங்கப்படும்.
அனைத்து, மாவட்டங்களிலும், 5.12 கோடி ரூபாயில், நவீன கண் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், மருத்துவத் துறையில் முதன்முறையாக, 24 மணி நேர பேரிடர் மேலாண்மை மையம், 2.1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலுார், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மனநல சிறப்புப் பிரிவுகள், 3.34 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024