Wednesday, July 5, 2017

சிகலா, சிறை,தண்டனை,ரத்தாக,வாய்ப்பில்லை
 DINAMALAR

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை.



அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சிறையில் அடைப்பு:

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்ட னையை உறுதி செய்து, பிப்., 14ல் உத்தர விட்ட னர். ஜெ., மறைந்து விட்டதால், அவருக்கு எதிரான அப்பீல் வழக்கு கைவிடப்பட்டது.சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கர்நாடக அரசுசார்பில், ஜெ.,க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவரது சொத்து களை விற்று வசூலிக்க வேண்டும் என, தாக்கல் செய்யப் பட்ட மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா சார்பில், சீராய்வு மனு, உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், எங்களை தண்டிப்பதற்கு, நாங்கள் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல. அந்த சட்டமானது, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்; எங்க ளுக்கு பொருந்தாது. 'எனவே, இந்த வழக்கில், எங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள,

நான்கு ஆண்டுகள் சிறை தண்ட னையை ரத்து செய்து, எங்களை விடுவிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்மனு மீதான விசாரணை, நாளை நடக்கிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா, நிராகரிக்கப் படுமா; விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும்,

சசிகலாவிடுவிக்கப்படுவாரா என, கேள்விகள் எழுந்துள்ளன.

எதிர்பார்ப்பு:

'மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு .அதிகம். விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும், இறுதி யில் தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்பு அதிகம்' என, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பை, அ.தி.மு.க., வினர் பீதியுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

ஏனெனில், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி, அவரை சந்திக்கச் செல்லவில்லை. அவரால், அ.தி.மு.க., துணை பொதுச் செயல ராக நியமிக்கப்பட்ட, தினகரன் ஒதுக்கிவைக்கப் பட்டு உள்ளார்.இந்த சூழலில், சசிகலா வந் தால், மீண்டும் கட்சிக்குள் குழப்பமும், ஆட்சிக்கு சிக்கலும் ஏற்படும். அவரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டால், முதல்வர் பழனிசாமி அணியினர், துணிந்து தனித்து செயல்படத் துவங்குவர்.

எனவே, நாளைய தீர்ப்பை, அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கின்றனர். அவர் விடுதலை யானால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கட்டுப் பாட்டிற்குள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை யில், அவரது விடுதலையை, சசிகலா குடும்பத் தினரும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்பார்க்கின்றனர்.சீராய்வு மனு தீர்ப்பை, பன்னீர் அணியினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024