மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85% உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை பாதிக்காது: உச்சநீதிமன்றம்
புதுதில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85 சதவீத உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை பாதிக்காது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனகோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தது.
மேலும், நீட் தேர்வு முறையை பாதிக்கும் வகையில், தமிழக அரசின் அரசாணை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படியும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment