Thursday, July 6, 2017

' பென்ஸ் கார்' வேணாம்பா; சாதாரண கார் போதும்'.சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்.


‘ பென்ஸ் கார்’ வேணாம்பா; சாதாரண கார் போதும்’…சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்கும் விதமான, ரூ. 3.5 கோடியில் வாங்கப்பட இருந்த ‘பென்ஸ்சொகுசு கார்’ தேவையில்லை சாதரண கார் போதும் என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்அறிவறுத்தி வருகிறார். இந்நிலையில், அரசு சார்பில் ரூ. 3.5 கோடி செலவில் முதல்வர் பயன்பாட்டுக்காக இரு பென்ஸ் ரக சொகுசு கார்கள் வாங்கப்பட இருந்தன. இந்நிலையில், அந்த கார்கள் தமக்கு தேவையில்லை தற்போது இருக்கும் கார்களே போதுமானது என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து முதன்மைச் செயலாளர் அவிநீஷ் அவஸ்தி கூறுகையில், “ முதல்வர் பயன்பாட்டுக்காக ரூ. 3.5 கோடி செலவில் இரு மெர்சடீஸ் பென்ஸ் ரக கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலத்தில் சிக்கின நடவடிக்கையை காரணம் காட்டி, அதை வாங்கவேண்டாம் என முதல்வர் ஆதித்யநாத்தெரிவித்துள்ளார். இப்போது புதிய வாகனங்கள் தேவையில்லை, சமாஜ்வாதி அரசில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையே தானும் பயன்படுத்திக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துவிட்டார்.

சமாஜ்வாதி அரசில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.1.5 கோடி செலவில், 2 பென்ஸ் கார்கள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024