Sunday, July 2, 2017

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப்பெற்றவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான பதிவுwww.mcc.nic.inஎன்ற இணையதளத்தில் வரும் 3-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025