Thursday, August 10, 2017

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை
பதிவு செய்த நாள்09ஆக
2017
19:20




தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆக.,9) பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 

மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம், மேலூர், கல்லம்பட்டி , தும்பைபட்டி, வெள்ளலூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024