Wednesday, November 1, 2017

நாட்டுக்கு நல்லது!

பதிவு செய்த நாள்

30அக்
2015 
00:00
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், ரஷ்யா மற்றும் இதர நாடுகளில், தனது குழுவின ருடன் கலைப்பயணம் செய்துவிட்டு தமிழகம் திரும்பினார்.
விமான நிலையத் தில் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். அதில் ஒருவர், ''கலைப் பயணம் செய்ததில் உங்களுக்கு வருமானம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏதும் உண்டா?'' எனக் கேட்டார்.
கேள்வி கேட்ட நிருபரும், இதர நபர்களும் கலைவாணர் என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்தனர். ஏனெனில், இதற்கான கட்டணமும் ஏதுமில்லை; வரியும் இல்லை.
''ஆம் தமிழ்நாட்டிற்கு லாபம் தான். எங்கள் குழுவில் மொத்தம் முப்பதுபேர். நாங்கள் ஒரு மாதமாக ஊரில் இல்லை. எனவே, எங்களின் குடும்ப அட்டைக்கான அரிசி, எண்ணெய் உட்பட பல பொருட்கள் வழங்கப் படவில்லை. அந்தப் பொருட்களினால், அரசுக்கு மிச்சம்தானே. அதுவும் நாட்டிற்கு ஒரு பயன்தானே!'' என்றார் கலைவாணர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 06.12.2025