Saturday, November 18, 2017

வீடு தேடி தபால் சேகரிக்கும் தபால்காரர்கள்

Added : நவ 18, 2017 01:33

ராமநாதபுரம்: விரைவு தபால்களை அனுப்ப தனியார் கூரியர்களை நாடுவதை தவிர்க்க , வீடு தேடிச்சென்று விரைவு தபால், பதிவு தபால்களை சேகரிக்கும் திட்டத்தை நவ.20 முதல் தபால்துறை அமல்படுத்த உள்ளது.

வணிக வங்கிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பொது துறையான தபால் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகளுக்கு தனியார் கூரியர் நிறுவனங்களை நாடுவதை தவிர்க்க தபால் துறையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தபால்காரர்கள் இனி தபால் பட்டுவாடா செய்வதோடு தங்கள் பணியை நிறுத்தாமல், பதிவு தபால், விரைவு தபால்களை பொதுமக்களின் வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்று சேகரிக்க உள்ளனர். நவ.,20 முதல் இந்த சேவை துவங்க உள்ளது. பதிவு தபாலுக்கு குறைந்தபட்சம் 20 ரூபாய், விரைவு தபாலுக்கு குறைந்தபட்சம் 50 கிராம் எடை வரை 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தபாலை பெற்றுக்கொண்டு தபால்காரர் ரசீதும் வழங்குவார். இந்த சேவை முதற்கட்டமாக தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் துவக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024