Thursday, November 2, 2017

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் முடிவடையும் கோபால் எம்.பி., தகவல்



திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் விரைவில் முடிவடையும் என கோபால் எம்.பி., கூறினார்.

நவம்பர் 01, 2017, 04:15 AM

திருவாரூர்,

மன்னார்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பினை ரெயில்வே துறை வெளியிட்டது. இதற்காக முயற்சி செய்த நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி.க்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விழாவில் நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதை, பேரளம்-காரைக்கால் அகல ரெயில் பாதை ஆகிய பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை துரிதப்படுத்திட ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் பணி முடிந்து ரெயில் போக்குவரத்து தொடங்கும். திருவாரூர் மற்றும் நாகை பகுதிகளுக்கு சில ரெயில்கள் நீட்டிப்பு செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்திடவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், நுகர்வோர் மைய செயலாளர் ரமேஷ், தலைவர் அண்ணாதுரை, நகர மேம்பாட்டுக்குழு பொதுச்செயலாளர் அருள், வர்த்தக சங்க துணைச்செயலாளர் அண்ணாதுரை, திருவாரூர் வளர்ச்சி ஆலோசனை குழும தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். முடிவில் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024