Wednesday, November 8, 2017

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது

நவம்பர் 07, 2017, 11:49 AM

மதுரை

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012–ம் ஆண்டு திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக்கோரி, அவருடைய மனைவி லதா கடந்த 2014-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம், நெருங்கிவிட்டோம் என கூறி வந்தனர். ஆனால் அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

தொடர்ந்து பல முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மேலும் அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை விடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராமஜெயம் கொலை வழக்கு விசார ணையை சி.பி.ஐ.க்கு மாற்றியும், 3 மாதங்களில் அறிக் கை அளிக்குமாறும் உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024