ஆங்கிலம் அறிவோமே 190: இந்த வலையில் சிக்கிடாதீங்க!
Published : 12 Dec 2017 15:22 IST
ஜி.எஸ்.எஸ்.
கேட்டாரே ஒரு கேள்வி
“தாய் மொழியில் நிறுத்தக் குறிகளே கிடையாதாமே!”.
உங்கள் தாய்மொழி தமிழ் என்றால் அதில் நிச்சயம் நிறுத்தக் குறிகள் (Punctuation marks) உண்டு. ஆனால், நீங்கள் தாய்லாந்தின் முக்கிய மொழியான தாய் மொழியைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த மொழியில்கூட நிறுத்தக் குறிகள் உண்டு, ஆனால், மிகக் குறைவாம். வார்த்தைகளுக்கிடையே இடைவெளிகூட அவசியமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளிகூட இல்லாமல் வாக்கியங்களை அவர்கள் எப்படி அமைக்கிறார்கள் என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
“என் கணினியில் ஏதோ பிரச்சினை என்று அதைச் சரிசெய்யச் சொன்னால் என் மகன் ‘பிக்னிக்’ என்று நமட்டுச் சிரிப்போடு சொல்கிறான். பிக்னிக் என்றால் சுற்றுலா என்றுத் தெரியும். அதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? அகராதியைத் தேடியும் பயனில்லை” என்கிறார் ஒருவர்.
கிண்டல் சிரிப்புக்குப் பின்னணி இதுதான். PICNIC என்பதன் விரிவாக்கம் Problem In Chair, Not In Computer. அதாவது கணினியில் அல்ல, உங்களிடம்தான் பிரச்சினை!
“ஒரு வார்த்தைக்குப் பதிலாக அதே அர்த்தம் கொண்ட வேறு வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத்தானே thesaurus என்பது உதவுகிறது?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
Thesaurus என்பது ஒரு வார்த்தையின் சம அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் எதிர் அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் அளிக்கும் நூல். ஆனால், அவற்றிலுள்ள சமவார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, Vision என்றாலும் sight என்றாலும் ஒரே பொருள்தான் – பார்வை. ஒன்றின் சம வார்த்தையாக இன்னொன்று thesaurus-ல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒருவரை “He is a visionary” எனும்போது அது அவருக்கான பெரிய பாராட்டு. தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று இதற்குப் பொருள். Vision என்றாலும் Sight என்றாலும் ஒன்றுதானே என்ற எண்ணத்தில் He is a sight என்று நீங்கள் கூறிவிட்டால் சம்பந்தப்பட்டவர் உங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்காமல் போகலாம். அது அவரை அவமானப்படுத்துவதுபோல. பேச்சு வழக்கில் ‘அவர் ஒரு ஜந்து’ என்று கிண்டலாகக் குறிப்பிடுவதைப் போன்றது அது.
அதேபோல see என்பதற்கான சம வார்த்தை look. ஆனால், oversee என்றால் surpervise செய் என்று அர்த்தம். Overlook என்றால் அலட்சியம் செய்துவிடு என்று அர்த்தம்.
“He was high” என்பது ஒருவரைக் கேலி செய்யும் வாக்கியம்தானே?
மதுவின் ஆதிக்கத்தில் ஒருவர் இருப்பதை “He was high” என்று குறிப்பிடுவதை மட்டுமே கவனித்துவிட்டு இப்படிக் கேள்வி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.
He was high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் அப்போது ஒருவிதப் பரவச நிலையில் இருக்கிறார் என்று மட்டுமே பொருள். அவருக்கு மிகவும் பிடித்த அரிய வகைப் பாட்டு ஒன்றைக் கேட்டிருக்கலாம். அவரது கடிதம் ஒன்று நாளிதழில் பிரசுரமாகி இருக்கலாம். அவருடைய சகோதரர் வெளிநாட்டிலிருந்து அடுத்த வாரம் வீடு திரும்புவதாகத் தகவல் கூறி இருக்கலாம் (இந்தப் பட்டியலில் “அவர் மது அருந்தி இருக்கலாம்’’ என்பதற்கும் இடம் உண்டுதான்). எனவே, when somebody is high அவர் குடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
Fishing என்றால் மீன் பிடித்தல். Phishing என்றால்?
இதுவும் ஒருவிதத்தில் ‘வலை வீசுவதுதான்’. வலைத்தளத்தில் வலை வீசப்படுகிறது.
உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும். நம்பகமான ஒருவரிடமிருந்து வந்ததுபோல அது தோற்றம் அளிக்கும். இதைப் படித்துவிட்டு நீங்கள் உங்கள் அந்தரங்கமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள் அல்லது நீங்கள் பலவிதங்களில் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். இவற்றால் உங்களுக்கு வருங்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும். சில நேரம் இந்த மோசடி மின்னஞ்சல்களில் குறிக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டாலே நம் கணினிகளின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய malware அதில் புகுந்துவிடும்.
இதுபோன்ற மோசடியை முகம் தெரியாத பலரும் நடத்துகிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரையோ நிறுவனத்தையோ குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றால் அதை Spear Phishing என்று குறிப்பிடுகிறார்கள்.
போட்டியில் கேட்டுவிட்டால்?
It has now been _________ that 120 people died in the air crash.
(a) Assured
(b) Confirmed
(c) Ensured
(d) Accepted
(e) Afraid
விமான விபத்தில் 120 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இந்த வாக்கியத்தின் அர்த்தம்.
Afraid என்ற வார்த்தை இங்குப் பொருந்தவில்லை. காரணம், it is என்று வாக்கியம் தொடங்கவில்லை. It has now been என்று தொடங்குகிறது.
Assured, ensured போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதன் அர்த்தம் விபரீதமாக இருக்கிறது. ஏதோ அந்த விமான விபத்தில் 120 பேர் இறந்தாக வேண்டுமென்று உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதுபோல் தொனிக்கிறது.
மீதமிருக்கும் வார்த்தைகளான confirmed, accepted ஆகியவற்றைப் பார்ப்போம். ஏதோ ஒரு அமைப்பு ‘120 பேர் இறந்ததாக’ கூறியிருந்து அதைப் பிறர் (அல்லது யாரோ) ஏற்பதாக இருந்தால் accepted பொருந்தலாம். அப்படி இங்கு எதுவுமில்லை.
விமான விபத்து நடந்து அதில் எவ்வளவு பேர் இறந்தனர் என்று தெரியாத நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, confirmed என்ற வார்த்தை இங்கே பொருந்துகிறது.
It has now been confirmed that 120 people died in the air crash.
“Else என்ற வார்த்தைக்கு என்னதான் பொருள்?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் ஒரு வாசக நண்பர்.
I spoke to Karthick but I did not talk to anyone. இந்த வாக்கியம் தவறானது. அதன் முதல் பகுதி “நான் கார்த்திக்கிடம் பேசினேன்” என்று உள்ளது. அந்த வாக்கியத்தின் இரண்டாவது பகுதி “நான் யாரிடமும் பேசவில்லை” என்கிறது. இரண்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
நான் கார்த்திக்கைத் தவிர வேறு யாரிடமும் பேசவில்லை - இதுதான் கூறவந்த தகவல். இதை ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் ‘else’ என்ற வார்த்தை தேவைப்படுகிறது.
I spoke to Karthick but I did not talk to anyone else.
விஜயகுமார் கல்லூரிக்குக் கிளம்புகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு “He is not at college. He must have gone somewhere” என்று சொல்லக் கூடாது. ஏனென்றால் ‘somewhere’ என்பதில் கல்லூரியும் அடக்கம்தானே? எனவே “He is not at college. He must have gone somewhere else” என்றுதான் சொல்ல வேண்டும்.
Label என்பது பள்ளிப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்படுவதுதானே?
அதுமட்டுமல்ல நண்பரே. பல பொருள்களை வாங்கும்போது அவற்றின்மீது ஒட்டப்பட்டிருக்கும் தாளில் அந்தப் பொருள் தொடர்பான பல தகவல்களை எழுதி இருப்பார்கள். இந்தச் சீட்டின் பெயர்கூட labelதான்.
Tittle என்றால் என்ன?
ஆங்கில எழுத்துக்களான ‘i’, ‘j’ ஆகியவற்றின் மேலே உள்ள புள்ளியைத்தான் அப்படிக் கூறுவார்கள். மிகக் குறைந்த தொகையையும் அப்படிக் குறிப்பிடுவதுண்டு.
You should not be enviable of others’ progress. சரிதானே?
மற்றவரின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், enviable என்ற வார்த்தைக்குப் பதிலாக envious என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com

No comments:
Post a Comment