Wednesday, December 27, 2017

டிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ்அப் அதிரடி


நடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல்
மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க இதற்கான காலக்கெடு 2017 ஜூன்-30 வரை  நீடிக்கப்பட்டது. மேலும் இது 2017டிசம்பர் வரையிலும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட மென்பொருள் கொண்ட மொபைல் போன்களில் இனியும் தங்களால் தொடர்ந்து சேவையை வழங்க முடியாது என கூறியுள்ளது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள தங்களது முடிவால் பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...