Monday, December 18, 2017

திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம் :6 நாட்களுக்கு அமல்

Added : டிச 17, 2017 22:00 |



திருப்பதி:திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

நேரம் குறையும்

இது குறித்து கோவில் தேவஸ்தானம் கூறி இருப்பதாவது:பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மணி நேர தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் குடோனில் காத்திருக்கும் நேரம் குறையும் . பக்தர்களின் ஆலோசனைப்படி, திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024