பொங்கல் பஸ் முன்பதிவு முடிந்தது
Added : டிச 26, 2017 00:09
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான, அரசு பஸ் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணியர் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வெளியூர் செல்லும் அரசு பஸ்களுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. அதனால், சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவை உடனே துவக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:பொங்கலுக்கு, சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது வழக்கம்.
இந்த ஆண்டும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தற்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், இரவு நேர பயணத்துக்கான டிக்கெட்டுகள் மட்டுமே தீர்ந்துள்ளன.
பகலில் பயணம் செய்வோர், இப்போதே முன்பதிவு செய்தால், கடைசி நேர பதற்றத்தைக் குறைக்கலாம். இரவில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோருக்கு, சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment