வங்கி ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு
Added : டிச 26, 2017 00:00
சென்னை: 'வாகன கடன் தொகையை முழுவதும் செலுத்தியும், தடையின்மை சான்றிதழ் வழங்க மறுத்த தனியார் வங்கி, வாடிக்கையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, அண்ணாநகர், வைகை காலனியை சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, தனியார் வங்கி ஒன்றில், கார் வாங்க, 3.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வட்டியுடன் முழு தொகையை செலுத்தியும், தடையின்மைசான்றிதழையும், கடன் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட, காசோலைகளை வழங்கவும், வங்கி மறுத்து வந்தது.
எனவே, 'தடையின்மை சான்றிதழ், காசோலைகளை வழங்க வேண்டும்; மன உளைச்சலுக்கு, உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்' என, சென்னை, மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு: வங்கி உரிய சேவை வழங்கவில்லை. தடையின்மை சான்றிதழுடன், ஆறு காசோலைகளையும், மனுதாரருக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். அத்துடன் இழப்பீடாக, 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும் தர வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment