Sunday, December 17, 2017

மற்ற இடங்களில் வியாபாரம் 'டல்லு' ஆர்.கே., நகருக்கு வண்டிய 'தள்ளு'

Added : டிச 16, 2017 19:40

-ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், பிரசாரம் சூடு பிடித்திருப்பதால், ஆங்காங்கே பொதுக்கூட்டம், ஓட்டு சேகரிப்பு, வீதி பிரசாரம் என, தொகுதிக்குள் கூட்டம் அள்ளுகிறது.வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து தொகுதிகளில் இருந்தும், ஆர்.கே.நகருக்குள், காலை, மாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.இதை மையப்படுத்தி, தள்ளு வண்டி வியாபாரமான, வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, துண்டு பழ கலவை, வேர்க்கடலை, சோளம், பொறித்த அப்பளம் பாக்கெட், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் போன்ற, தள்ளுவண்டிகளில் செய்யப்படும், உணவு பொருட்களின் வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.இதனால், தொகுதிக்குள் வழக்கத்திற்கு மாறாக, அதிகளவில், தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. அவை, பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள், பிரசார வீதிகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன.ஆர்.கே.நகருக்குள் நல்ல வியாபாரம் இருப்பதாவும், தொகுதிக்குள் அதிகளவில் மக்கள் இருப்பதால், சம்பாதிக்க முடிவதாகவும், தள்ளுவண்டி வியாபாரிகள் கூறுகின்றனர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024